திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகர திராவிடர் கழகத் தலைவர் சு.ஏழுமலையின் மகள் மு.பச்சையம்மாள் முருகேசன் (வயது 46) உடல் நலக்குறைவால் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். திருவண்ணாமலை மாவட்ட கழகக் காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் க.சங்கர், வேட்டவலம் நகர கழகச் செயலாளர் இரா.திருமலை, ஏ.சரவணன், ஏ.பிரபாகரன் ஆகியோர் பச்சையம்மாள் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
