சென்னை, ஜூன் 21- தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளரும், ‘விடுதலை’ விளம்பரப் பிரிவில் பணி புரிபவருமான இரா.சு.உத்ரா வின் தாயார் சு.கலாநிதி வயது(83)அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 8.6.2026 காலை 9.30 மணிக்கு மறை வுற்றார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மேலாளர் ப,சீதாராமன் ஆகியோர் அம்மையாரின் மறைவுக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர். கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் மற்றும் ‘விடுதலை’ நாளிதழ் ஊழியர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.
அம்மையாரது மூத்த மகனது கொடுங்கையூர் இல்லத்தில் உறவினர்கள், கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
சுயமரியாதைப் படி இறுதி நிகழ்வு நடத்துவது என்ற மறைந்த அம்மையாரின் மகன்கள், மகள்கள் விருப் பத்தின்படி தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன் தலைமையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி எந்தவிதச் சடங்குகளும் இல்லாமல், சம்பிரதாயங்களைப் புறக் கணித்து இறுதி நிகழ்வு நடந்தது.
நிகழ்வில் கழகப் பொறுப் பாளர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர். நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சு.கலாநிதி அம்மையாரின் சிறப்புகளையும், சுயமரியாதை முறைப்படி செய்யப்படுவது ஏன்? சடங்குகள் தவிர்க்கப்பட்டது ஏன்? என்றும் எடுத்து ரைத்து இரங்கல் உரை நிகழ்த்தினார். இறுதி ஊர்வலம் புறப் பட்டு, கொடுங்கையூர் இடுகாட்டில் வீர வணக்க முழக்கத்துடன் 9.6.2026 காலை 10 மணிக்கு உடலுக்கு எரியூட்டப்பட்டது.
தோழர் சு.உத்ரா, அவரது சகோதரர்கள், “நாம் தனியாக பிரச்சார மேடைகள் போடுவது இல்லை. நம்முடைய வீட்டு இறப்பு நிகழ்ச்சிகளும், திருமண வீட்டு நிகழ்ச்சிகளும் தான் நமக்கு பிரச்சார மேடைகளாக இருக்கின்றன” என்று கூறி கழகத் தோழர்களுக்கு நன்றி கூறி வணக்கம் தெரிவித்தனர்.
