போர்நிறுத்தம் முறிவு? காசாவில் மீண்டும் ராணுவ நடவடிக்கை!

- Advertisement -

காசா, நவ.19- காசாவில் புதியதாக ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி யுள்ளதாக, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

காசாவில், பாலஸ்தீன கிளர்ச்சி யாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போரில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பன்னாட்டு நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கடந்த 2025 அக்டோபர் மாதம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், மத்திய காசா பகுதியில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக, புதன்கிழமை (நவ. 18) மாலை இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் இயங்கும் தங்கள் படைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய காசாவில் வசித்து வரும் பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், காசாவின் அகதிகள் முகாம்களுக்கு அருகிலுள்ள சலாஹ் அல்-தின் தெருவில் இஸ்ரேலிய படைகளின் டாங்கிகள் ஊடுருவி வருவதாகவும், அப்பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, காசாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,710 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 2025 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகான இஸ்ரேலின் தாக்குதல்களில் மட்டும் 1,658 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *