சோத்துப்பாறை அணையிலிருந்து தன் விருப்பமாக தண்ணீரைத் திறந்து விட்ட த.வெ.க. நிர்வாகிகள்!

- Advertisement -

பெரியகுளம், நவ.19- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது சோத்துப்பாறை அணை. பெரியகுளம் மட்டுமல்லாது தென் கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன்மூலம் 2 ஆயிரத்து 865 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை, கடந்த அக்.15-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ததால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி நிரம்பி வழியத் தொடங்கியது.

இந்த உபரிநீர் அணையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள அத்திமுருகு எனும் இடத்தில் உள்ள மதகை சென்றடைகிறது. பின்பு அங்கிருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பிரிந்து செல்லும் வகையில் மடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க இன்னமும் அரசாணை வெளியிடவில்லை.

இந்நிலையில் சமூக வலைதளங் களில் தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் இந்த மடையைத் திறந்து மலர் தூவி பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டதாக ரீல்ஸ்கள் பரவின.

அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இது குறித்து நீர்வளத்துறையினரிடம் விசாரித்ததில் பாசனத்துக்காக இன்னமும் நீர் திறக்கவில்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘தவெக தேனி மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் பாசனத்துக்கு நீர் திறந்ததாக சமூக வலைதளங்களில் காட்சிப் பதிவுகள் பரவின. விசா ரித்ததில் நீர் திறப்புக்கு இன்னமும் அரசாணை வரவில்லை என்று தெரிய வந்தது’ என்றனர்.

இது குறித்து பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் அன்பரசனிடம் கேட்டபோது, ‘சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் தற்போது அணையில் இருந்து வெளியேறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பாசனத்துக்கு என்று தனியாக இன்னமும் நீர் திறக்கவில்லை. மழை குறைந்து இந்த உபரிநீர் வெளியேறாவிட்டால் மடைக்கு நீர் செல்லாது. ஆகவே, முறைப்படி அரசாணை பெற்ற பிறகே நீர் திறக்கப்படும்’ என்றார்.

இந்நிலையில் பாசன மடை திறக்கப்பட்டதை உறுதி செய்த நீர்வளத்துறையினர் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதவி செயற் பொறி யாளர் மனோஜ்குமார் அளித்த புகாரில் அடையாளம் தெரியாத சிலர் அத்துமீறி சென்று பாசன மடையை திறந்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அதில் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *