பணவீக்கம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட ஒன்றிய அரசுக்குக் காங்கிரஸ் வலியுறுத்தல்

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.19 பணவீக்கம் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:  பண வீக்கம் குடும்பங்களின் வரவு.செலவுத் திட்டத்தைச் சீர் குலைப்பதாகவும், அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. கைத் தொலைபேசிகள், டிவி முதல் பிஸ்கட், உப்பு வரை பல பொருள்களின் விலை உயர்த்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால் விலை உயர்ந்துள்ளதோடு, நெய், சமையல் எண்ணெய்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சில பொருள்களின் விலை உயர்த்தப்படுகிறது, அதே சமயம் சில பொருள்களின் பாக்கெட் அளவைக் குறைப்பதன் மூலம், நுகர்வோருக்குக் கிடைக்கும் பொருளின் அளவு குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, சாமானிய மக்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பணவீக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொடரின் கீழ், சில்லறை விலை பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் மேல் வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டியிருப்பது இதுவே முதல்முறை. வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் அன்றாடத் தேவைகள் வரை அனைத்தும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், 61 சதவீத இந்தியக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் 20 சதவீதத் திற்கும் மேல் அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, பல வங்கிகள் வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

இவ்வாறு கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *