முதல் இடம் தமிழ்நாட்டுக்கு… எதில் தெரியுமா? விலைவாசி உயர்வில்!

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.14- இந்தியாவில் விலைவாசி உயர்வில் 7.29 சதவீதத் துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தெலுங்கானா – 7.26 சதவீதத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதத் துக்கான நுகர்வோர் விலை பற்றிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இதில் நாட்டின் ஒட்டுமொத்த சில்லறைப் பணவீக்கம் (விலைவாசி) கடந்த அக்டோபர் மாதம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பரில் 5.54 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களுக் கான விலைவாசி 7.74 சதவீதத்தில் இருந்து 8.94 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மாதத்தில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, எலுமிச்சை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. அதேநேரத்தில் உருளைக் கிழங்கு, காலிபிளவர், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.

கடந்த மாதத்தில் விலைவாசி உயர்ந்த பொருட்களின் பட்டிய லில் வெங்காயம் முதலி டத்தில் உள்ளது. இதன் விலை 116.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது 108.13 சதவீதமாக இருந்தது. அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது வெங் காயத்தின் விலை 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் விலை வாசி உயர்வில் 7.29 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தெலுங்கானா – 7.26 சதவீதத்துடன் 2ஆவது இடத்திலும், ஆந்திரா – 7.25 சதவீதத்துடன் 3ஆவது இடத்திலும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மத்தியபிரதேசம் – 7.19 சதவீதத்துடனும், ஒடிசா – 7.17 சதவீதத்துடனும் உள்ளன.

அதேபோல் கடந்த மாதம் நாட்டின் கிராமப் புறங்களின் ஒட்டு மொத்த சில்லறை விலை 6.63 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.41 சதவீதமாகவும் இருந்தது. உணவுப் பொருட் களுக்கான விலைவாசி கிராமப்புறங்களில் 9.09 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.68 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் குடும்பச் செலவினங்களை அதிகரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, வெங்காயம், பூண்டு போன்ற பொருட் களின் விலை உயர்வு சாமானிய மக்களை அதிகம் பாதிக்கக்கூடும். அதேநேரத்தில் சில காய்கறிகளின் விலை சரிவு ஓரளவுக்கு நுகர்வோருக்கு ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், உணவுப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பது குடும்பங்களின் வாங்கும் திறனுக்கும் நாட்டின் பொருளாதார நிலைக்கும் முக்கியமான சவாலாக இருந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *