நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு – அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கண்டனம்

4 Min Read
- Advertisement -

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு – பெரியாரின் கொள்கைகளையும்,
தமிழ்நாட்டின் சமூகநீதி மரபையும் சிறுமைப்படுத்துவதாக அமைகிறது!
வழக்கை வேறு அமர்விற்கு மாற்ற வேண்டும்!

சென்னை, நவ.18 நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு பெரியாரின் கொள்கைகளையும், தமிழ்நாட்டின் சமூகநீதி மரபையும் சிறுமைப்படுத்து வதாக அமைகிறது! அவர் விசாரிக்கும் வழக்கை வேறு அமர்விற்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வழிவகை செய்யவேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வின் தலைவர் ஆர்.கோபால்சங்கர், பொதுச்செயலாளர் ச.சிவக்குமார் ஆகி யோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன!

கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கான நூல்கள் கொள்முதலில், தரமற்ற நூல்கள் மற்றும் மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளன.

பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் நீதிபதி எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், மேற்படி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 12.11.2026 அன்று சென்னை மயிலாப்பூரில் எழுத்தா ளர் பி.சுவாமிநாதன் எழுதிய ‘மகா பெரியவா’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் சர்ச்சை பேச்சு!

அந்நிகழ்ச்சியில், பெரியார் பெய ரில் அமைந்துள்ள நூலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறான நூல்களால் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்ய, பாவம் நீங்க அங்குள்ள அனைத்து அலமாரிகளிலும் ‘மகா பெரியவா’ குறித்த நூல்கள் இடம்பெற வேண்டும் என்ற பொருளில் அவர் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு நீதிபதி தனது தனிப்பட்ட மத நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கான உரிமையை எவரும் மறுக்க முடியாது. ஆனால், தனது முன்பு விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் பொருண்மையோடு நேரடியாகத் தொடர்புடைய நிறுவ னத்தைப் பற்றியும், அங்கு எந்தக் கருத்தி யல் அல்லது மதத் தலைவரின் நூல்கள் இடம்பெற வேண்டும் என்பது பற்றியும் பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பது கடுமையான நீதித்துறை நெறிமுறைப் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

பெரியாரின் கொள்கைகளையும், தமிழ்நாட்டின் சமூகநீதி மரபையும் சிறுமைப்படுத்துவதாக அமைகிறது!

தந்தை பெரியார் அவர்கள் பகுத்த றிவு, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பெண்ணு ரிமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வற்றிற்காக வாழ்நாள் முழுவதும் போரா டியவர். அவரது பெயரில் அமைந்துள்ள அறிவுலகத்தின் அலமாரிகளில் குறிப்பிட்ட மதத் தலைவரின் நூல்களை வைப்பதன் மூலம் அங்கு ஏற்பட்ட தாகக் கூறப்படும் தவறு நீங்கும் அல்லது புண்ணியம் சேரும் என்ற பொருளில் கருத்துத் தெரிவிப்பது, பெரியாரின் கொள்கைகளையும், தமிழ்நாட்டின் சமூகநீதி மரபையும் சிறுமைப்படுத்துவதாக அமைகிறது. நீதிபதியின் கருத்தை விமர்சித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் மீது தனிநபர் தாக்குதலை நீதிமன்ற நடவடிக்கையின் போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மேற்கொண்டது நீதித்துறை நெறிகளுக்கு முரணானது.

மேலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முந்தைய காலங்களில் பங்கேற்ற பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஸநாதன தர்மத்தையும், குறிப்பிட்ட இந்து மதத் தலைவர்களையும் உயர்த்திப் பேசியுள்ளதாகப் பொதுவெளியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பதவி வகிக்கும் ஒரு நீதிபதியின் இத்தகைய பொதுவெளிக் கருத்துகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளான மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் நீதித்துறை நடுநிலைமை ஆகியவற்றுடன் பொருந்துகின்றனவா என்ற நியாயமான கேள்வியை எழுப்பு கின்றன.

நடுநிலைமை குறித்து நியாயமான சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது!

நீதி வழங்கப்படுவது மட்டும் போதாது; நீதி பாரபட்சமின்றி வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையும் பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அந்த வழக்கின் தரப்புகள், பொருண்மை அல்லது அதனோடு தொடர்புடைய அரசியல் மற்றும் கருத்தியல் விவகாரங்கள் குறித்து பொது வெளியில் கருத்து வெளியிடும் போது, அவரது நீதிபரி பாலனத்தில் நடுநிலைமை குறித்து நியாயமான சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

வேறு அமர்வுக்கு மாற்றுக!

நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இவ்வழக்கை வேறு அமர்விற்கு மாற்றி அமைக்க வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் மதச்சார்புடைய மற்றும் ஸநாதன ஆதரவுக் கருத்துகள், அவர் வகிக்கும் அரசமைப்புச் சட்டப் பதவியின் மதச்சார்பற்ற தன்மையோடு பொருந்துகின்றனவா என்பது குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், உரிய அரசியலமைப்புச் சட்ட அமைப்பு களும் ஆராய வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டமே நீதிபதியின் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

நீதிபதிகளின் தனிப்பட்ட நம்பிக்கை கள் நீதிமன்றத் தீர்ப்புகளிலும், நீதித்துறைச் செயல்பாடுகளிலும் பிரதி பலிக்கக்கூடாது. இந்திய அரசியல மைப்புச் சட்டமே நீதிபதியின் வழி காட்டியாக இருக்க வேண்டுமே தவிர, எந்தவொரு மத நூலோ, மதத் தலைவரோ அல்லது மதக் கருத்தியலோ அந்த இடத்தைப் பிடிக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்தையும், நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மை யையும் பாதிக்கும் இத்தகைய கருத்து களை அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அகில இந்திய வழக்கு ரைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் தலைவர் ஆர்.கோபால்சங்கர், பொதுச்செயலாளர் ச.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *