மதுரை, நவ.19- தரமற்ற கட்டடம் கட்டுவோரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளம் அரசு கிளை நூலகத்தில் 36 ஆயிரம் புத்தகங்களும், 3,410 உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டு சுமார் ரூ.7.5 லட்சம் செலவில் நூலக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மழைநீர் உள்ளே புகுந்து புத்தகங்கள் சேதமடை வதுடன், மின் இணைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர அங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, சேதமடைந்த கட்டடத்தை ஆய்வு செய்து, புதிய நூலகக் கட்டடம் கட்டவும், அதுவரை தற்காலிக இடத்தில் நூலகம் செயல்படவும் உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று (18.11.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 20 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் எப்படி பழுதடைந்தது? இதுபோன்ற தரமற்ற கட்டுமானப் பணிகள் இனியும் நடைபெறக்கூடாது. கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடந்தால் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
தரமற்ற கட்டடங்களைக் கட்டுவோரை சிறைக்கு அனுப்ப வேண்டும்.” என காட்டமாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து புகார் தொடர்பாக பனைக்குளம் நூலகக் கட்டடத்தைக் கட்டிய பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தர விட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தவிட்டனர்.
