ஏஅய் தரவு மய்யம் அமைக்க எல்காட் நிறுவனம் – அய்.அய்.டி.எம்.க்கும் இடையே தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

- Advertisement -

சென்னை, நவ.6 எல்காட் நிறுவனம் மற்றும் அய்.அய்.டி.எம். பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மய்யம் அமைக்க எல்காட் (ELCOT) மற்றும் அய்.அய்.டி.எம். பிரவர்த்தக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (5.11.2026) கையெழுத்தானது.
இது தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது;- “செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா. குமார் முன்னிலையில் நேற்று (05.11.2026) தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசுக்கான செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மய்யத்தை அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாக(Project Monitoring Unit) செயல்பட, எல்காட் (ELCOT) நிறுவனம், அய்.அய்.டி.எம். பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் (அய்.அய்.டி. மெட்ராஸ்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) மேற்கொள்ளப்பட்டது.
முக்கியப் பணிகள்: மாநிலத் தரவு மய்யத்தை (State Data Center) மதிப்பாய்வு செய்வதும், அரசாங்கத்தின் பல்வேறு செயலிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உகந்ததாக(AI-ready) மாற்றி, அவற்றை இந்த புதிய மய்யத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான திட்டங்களை வகுப்பதும் இதன் முக்கியப் பணிகளாகும்.
இந்நிகழ்வின்போது, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி. விஷ்ணுசந்திரன்,
அய்.அய்.டி.எம். பிரவர்த்தக் நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜே. சங்கர்ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *