பக்தி வெறி: சொந்த மகளை அடித்துக் கொன்ற விபரீதம்! ‘சத்’ பூஜை ‘பிரசாதத்தை’ சாப்பிட்டதால் தாய் அடித்து 4 வயது மகள் உயிரிழப்பு

- Advertisement -

சமஸ்திபூர், நவ.18 பீகாரில் சத் பூஜைக்காக தயாரிக்கப்பட்ட ‘பிரசாதத்தை’ பூஜை செய்வதற்கு முன்பாக சாப்பிட்டதால், தாய் கொடூரமாகத் தாக்கியதில் 4 வயது மகள் உயிரிழந்தார். இது தொடர்பாக தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

வடமாநிலங்களில் தீபாவளி முடிந்த பிறகு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளின் நலன், செழிப்பு, நீண்ட ஆயுள் வேண்டி சூரியனை வழிபடும் ‘சத்’ பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் சத் பூஜைக்கான ஏற்பாடுகளில் ரீனா குமாரி என்பவரது குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். குடும்ப உறுப்பினர்கள் பூஜைக்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தனர்.

அப்போது ரீனா குமாரி வீட்டில் பூஜையின்போது ‘பிரசாதமாக’ படைப்பதற்கான உணவுப் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது 4 வயது மகள் சுஹானி, படையலுக்காக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள் ஒன்றை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரீனா, சுஹானியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ரீனா, தனது மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சுஹானியின் தந்தை ராஜு பாஸ்வான் கூறும்போது, ‘‘மகளின் உயிரிழப்பு தங்கள் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது. மகள் இல்லாத நிலையில் தனக்கு இனி சத் பூஜை ஒரு பொருட்டல்ல. மனைவி ரீனா குமாரிக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார். ரீனா குமாரியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *