பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 2 பேரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 18- பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 ஆண்டுகள் சிறையில் இருந்த இரு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான பிபின் சந்திர கனையாலால் ஜோஷி மற்றும் பிரதீப் ராமன் லால் மோடியா ஆகியோர் தங் களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி.வரலே அமர்வு முன்பு  16.11.2026 அன்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது இருவரும் 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மேல்முறை யீட்டு மனுக்களில் சட்ட ரீதியாகவும், உண்மைத் தகவல்கள் அடிப்படையிலும் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இருவரின் ஆயுள் தண்டனையையும் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிணை வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *