ராமன் கோயில் காணிக்கை திருட்டு: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நபர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக காங். குற்றச்சாட்டு

- Advertisement -

புதுடில்லி, நவ. 17- இராமன் கோயில் காணிக்கை திருட்டு விவ காரத்தில் பிரதமர் மோடியின் மவுனம் நாட்டுக்கு மிகவும் கவலையளிப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க, உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும் வகையில் ஒரு சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இராமன் கோயிலின் காணிக்கை திருட்டு என்பது நம்பிக்கை மீது இழைக்கப்பட்ட துரோகம். திருட்டு ஒருபோதும் மறைந்திருக்காது என்றும், காலப்போக்கில் ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும் என்றும் சொல்வார்கள். அயோத்தியில் உள்ள இராமன் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரத்தில், நாள்தோறும் வெளிவரும் புதிய தகவல்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களைக் காப் பாற்ற ஒன்றிய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் முயற்சிப்பதை அம்பலப்படுத்துகின்றன.

இந்த விவகாரம் இப்போது வெறும் திருட்டுடன் மட்டும் நின்று விடவில்லை. ஒரு விசாரணை என்ற பெயரில், இந்த நாட்டு மக்களும் உச்ச நீதிமன்றமும் ஏமாற்றப்பட்டனவா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும், நீதிமன்றத்துக்கு காட்டுவதற்காக மற்றொரு குழுவும் என மொத்தம் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன என்பது தெளிவாகிறது.

20.7.2026 அன்று, முதல் குழு எந்த விசாரணையையும் நடத்த வில்லை என்று மாநில அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது. அப்படி யிருக்க, 4.8.2026 அன்று மாநிலச் சட்டமன்றத்தில், அதே குழுவின் ஆரம்பகட்ட விசாரணையை முதல மைச்சர் எதன் அடிப்படையில் மேற்கோள் காட்டினார்? இது எந்த அடிப்படையில் செய்யப்பட்டது? சட்டமன்றத்துக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதா அல்லது உச்ச நீதிமன்றம் தவறாக வழிநடத்தப் பட்டதா?

எந்த விசாரணையும் நடக்க வில்லை என்றால், 6.7.2026 அன்று அறக்கட்டளை எதன் அடிப்படையில் சம்பத் ராய்க்கு ‘குற்றமற்றவர்’ (clean chit) என்ற சான்றிதழை வழங்கியது? எந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

மற்றொரு முக்கியமான கேள்வியும் உள்ளது. காவல்துறை அதிகாரி கிரண்.எஸ் என்பவர் முதல் குழுவில் உறுப்பினராக இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும் அவரே நியமிக்கப்பட்டார். முதல் குழு எந்த விசாரணையையும் நடத்தவில்லை என்றால், அதில் அவரது பங்கு என்ன? மேலும், அந்தக் குழுவோ அல்லது அதன் அதிகாரிகளோ அறக்கட்டளையிடம் ஒரு அறிக் கையைச் சமர்ப்பித்திருந்தால், அது எந்த அதிகாரத்தின் கீழ், எந்த உத்தரவின் பேரில் செய்யப்பட்டது?

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும் வகையில், புதிய மற்றும் சுதந்திரமான ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டிய நேரம் இது. இந்த விசாரணை காணிக்கை எண்ணும் மய்யத்துடன் மட்டும் நின்றுவிடக் கூடாது; அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் அதற்குப் பொறுப்பான ஒவ்வொரு நபரின் பங்கையும் அது நடுநிலையுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

மாநிலச் சட்டமன்றத்தில் முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் குறிப் பிடப்பட்ட, முதல் சிறப்பு புலனாய் வுக் குழுவை அமைப்பதற்கான அறி விப்பாணையும், அதன் செயல்பாட்டு வரம்புகளும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.

அந்த முதல் குழுவின் இடைக்கால மற்றும் இறுதி அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். மேலும், எந்த அதிகாரத்தின் கீழ் இந்த அறிக்கைகள் அறக்கட்டளையிடம் சமர்ப்பிக்கப்பட்டன என்பது விளக்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்துக்கு மட்டும் நேரடியாக அறிக்கை அளிக்கும் வகையில், அறக்கட்டளையின் செயல்பாடுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் விசாரிக்க, புதிய மற்றும் சுதந்திரமான ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *