காசா, நவ. 16- காசாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரி ழந்த நிலையில், 18 முஸ்லிம் நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக 2023ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த ஹமாஸ் அமைப்பின் கொடூரத் தாக்குதலை தொடர்ந்து, காசாவுக்கு எதிரான தீவிர போரில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில், பாலஸ்தீனியர்கள் பலர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு தப்பிச் செல் கின்றனர்.
இந்த நிலையில், காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவ வளாகம் மீது இஸ்ரேல், வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஒரு குழந்தை மற்றும் மருத்துவர் ஒருவர் உள்பட 6 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இதில், பலர் காய மடைந்தனர்.
இதில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் நோயாளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆவர் என தகவல் தெரி விக்கின்றது. இந்த சம்பவத்திற்கு சவுதி அரேபியா, அய்க்கிய அரபு அமீரகம், கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 18 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக கூட்டாக கண்டன அறிக்கையும் வெளி யிட்டன. இது, பன்னாட்டு மனி தாபிமான சட்ட விதிமீறல் என குறிப்பிட்டதுடன், காசாவுக்குள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் உதவிக்கு விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகளை நீக்கும்படி யும் வலியுறுத்தி உள்ளன.
எனினும், ஹமாஸ் அமைப்பின் கான் யூனிஸ் பகுதிக்கான தளபதி முகமது அபு இஸ்மாயிலை இலக்காக கொண்டே இந்த தாக்குதல் நடத் தப்பட்டது என்று இஸ்ரேல் பாது காப்புப் படை தெரிவித்துள்ளது.
