டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டிசம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் – மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டம்! மக்களவை இடங்களை 543-லிருந்து 850 ஆக உயர்த்தி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி. இதற்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுவதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவது அரசுக்கு சவாலாக இருக்கும்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தலித் மக்கள் பாஜகவைத் தோற்கடிப்பார்கள் – அகிலேஷ் நம்பிக்கை. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், தாழ்த்தப்பட்ட சமூகம் தற்போது அதிக விழிப்புணர்வுடனும், அரசியல் உறுதியுடனும் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், ‘தலித்’ என்ற சொல்லுக்கு ‘டமார் தலித்’ என்ற புதிய விளக்கத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆக்ராவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி பாஜகவின் வலுவான அரசியல் ஆதாரத்தைத் தகர்த்து, 2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் என்றார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நவம்பர் 26இல் ‘அரசியலமைப்புப் பாதுகாப்பு’ பேரணி – வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களை சரிபார்க்க காங்கிரஸ் திட்டம்! நவம்பர் 22 முதல் 30 வரை ‘வாக்குரிமைக் காவலர்’ இயக்கத்தின் கீழ் வாக்காளர் சரிபார்ப்பு நடைபெறும். தொடர்ந்து, கிராம அளவில் ‘வாக்கைக் காப்போம்; நாட்டைக் காப்போம்’ மக்கள் சந்திப்புகள் நடத்தப்படும் என காங்கிரஸ் திட்டம்.
தி இந்து:
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்! கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், மலை உச்சியிலோ தற்போது ‘தீபத்தூண்’ எனக் குறிப்பிடப்படும் கல் தூணிலோ தீபம் ஏற்றிய பாரம்பரியம் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘மோடி இத்தாலி பிரதமருக்கு மெலடி சாக்லேட் வழங்கலாம் என்றால், இத்தாலி அரசியல்வாதியும் இந்தியா குறித்து பேசலாம்’ – சஞ்சய் ராவத்! இந்திய அரசியல் குறித்து இத்தாலிய அரசியல்வாதியின் கருத்துக்கு பதிலளித்த சிவசேனா (UBT) தலைவர் சஞ்சய் ராவத், இந்தியாவில் ஜனநாயகம் படு கொலை செய்யப்படுவது அய்.நா. மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை; வெளிநாட்டு தலையீடு அல்ல என இந்தியா சம்மேளன கூட்டத்தில் பேச்சு.
– குடந்தை கருணா
