கல்லக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்! அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 15–  கல்லக் குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் எழுந்துள்ள புகாரில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய விசாரணை நடத்தி, ஆட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அண்ணா குபேரன், பொதுச்செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கல்லக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷினால் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத வகையில் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பொதுத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஒரு மாவட்டத்தின் உச்சபட்ச அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள பெண் அதிகாரிக்கு, ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் இத்தகைய தொந்தரவு ஏற்படுகிறது என்றால், அது அரசின் சட்டம் – ஒழுங்கு மற்றும் ஆட்சியின் மாண்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத் திமிரில் இச்செயலில் ஈடுபட்டாரா என்ற கேள்வியை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். குடும்பத்தைப் பாதுகாக்க அரசுப் பணிகளில் சேர்ந்து அயராது உழைக்கும் பெண்கள், தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அச்சத்தால் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இத்தகைய செயல் நடந்திருக்கக்கூடும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வருங்காலத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி காவல்துறையில் புகார் அளிக்கவும் ஏதுவாக, முதலமைச்சரின் நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

எனவே, கல்லக்குறிச்சி
சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அனைத்துப் பெண்களின் பாதுகாப்பையும் முதலமைச்சர் விஜய் உறுதிப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *