முதலமைச்சர் ஆய்வு செய்த பிறகும் காவல் நிலைய உயிரிழப்புகள் தொடர்கின்றன உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

- Advertisement -

சென்னை, நவ.15 தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு செய்த பிறகும் காவல் நிலையங்களில் மரணங்கள் தொடருவதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்தின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவாகி யுள்ளது.

இதுபற்றி, உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2026) வெளியிட்டுள்ள பதிவில்,

“முதலமைச்சர் காவல் நிலை யங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் உயிரிப்புகள் தொடருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே உயிரிழந் திருக்கிறார்.

புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக உடல்கூராய்வு செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, முறையாக விசாரித்து, இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதேபோல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த நிகழ்வில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.

தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ – நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, வசனம் பேசி ஆட்சி நடத்தும் இந்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?” எனக் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *