அறிவியல் துணுக்குகள்!

1 Min Read

அமேசான் மாலி எனப்படும் மீன் இனம் ஒரு லட்சம் ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி, பெண்களை மட்டுமே கொண்டு உயிர்வாழ்ந்து வருகிறது. மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் நதிகளில் வாழும் இவை ‘கைனோஜெனிசிஸ்’ முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. ‘ஜீன் கன்வெர்ஷன்’ எனப்படும் மரபணு சீரமைப்பு முறையே இவற்றின் நீண்டகால வாழ்விற்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சந்திரயான் – 2 விண்கலத்தின் ரேடார் கருவி வழங்கிய தரவுகளைக் கொண்டு, நிலவின் நிரந்தரமான நிழல் பகுதிகளில் உள்ள நான்கு பள்ளங்களுக்கு அடியில் பனிக்கட்டி இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை நம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, பாஸ்டினி (Faustini) பள்ளத்தின் உள்ளே அமைந்துள்ள 1.1 கி.மீ., அகலமான பள்ளத்தில் இதற்கான சான்றுகள் அதிகம் காணப்படுகின்றன.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது விண்வெளி இயற்பியலாளர் மருத்துவர் ரொனால்டோ லைஷ்ராம், 1260 கோடி ஆண்டுகள் பழைமையான ஒரு மாபெரும் நட்சத்திர நகரத்தை கண்டுபிடித்துள்ளார். இதற்கு, மணிப்பூரின் புகழ்பெற்ற ஏரியின் நினைவாக -‘லோக்டாக் புரோட்டோகிளஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பெங்களூரு அருகேயுள்ள கவுரிபிதானூர் ஆய்வகத்தில், இந்திய வானியற்பியல் நிறுவன ஆய்வாளர்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வானொலி தொலை நோக்கியைப் பயன் படுத்தி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’வில் உள்ள மிகக் குறைந்த காந்தப்புலங்களை அளவிட்டு சாதனை படைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *