சுராசந்த்பூர், நவ.13 மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், 10 அடி நீளமுள்ள ராக்கெட் மற்றும் சீனத் தயாரிப்பு மார்டர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள காங்வாய் உட்பிரிவுக்கு உட்பட்ட பி. கெல்ஜாங் (P. Geljang) கிராமத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்ப டையில், மாவட்ட காவல்துறையினரும் ராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, 10 அடி நீளமும், 80 கிலோ எடையும் கொண்ட ராக்கெட் ஒன்று, 4 சீனத் தயாரிப்பு 82 மி.மீ. மார்டர்கள், 6 வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
