இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் மணவிலக்குப் பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

- Advertisement -

புதுடில்லி, நவ.13 இந்தியாவில் திரு மணம் செய்துகொண்ட இணையர், வெளிநாடுகளில் உள்ள எளிமையான சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி மணவிலக்குப் பெற முடியாது என்றும், வெளிநாட்டில் மணவிலக்குப் பெற்றாலும் இந்திய சட்டப்படி அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக ஆகாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில், மணவிலக்கு வழங்க நீதிமன்றங்கள் ஏற்கும் கார ணங்களை இந்திய சட்டங்கள் அங்கீ கரிப்பதில்லை. எனவே, வெளிநாடு களில் மணவிலக்கு பெற்று இரண்டா வது திருமணம் செய்து கொண்டால், இந்திய சட்டப்படி, முதல் திருமணம் ரத்து செய்யப்படாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்ற மாகவே கருதப்படும் என்று உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

வெளிநாடு செல்லும் நபர்கள், தங்களது மனைவியின் ஒப்புதல் இன்றி பல்வேறு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் மணவிலக்குப் பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த நாட்டின் குடிமகனாக மாறினாலும்கூட, இந்திய சட்டப்படி அவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

உச்ச நீதிமன்றம் இது குறித்துப் பிறப்பித்த உத்தரவில், திருமண விவகாரத்தில், இந்திய சட்டத்தின்படி எதிர்கொள்ள வேண்டிய பின்விளைவு களை, வாழ்க்கைத் துணையின் குடியுரிமை மாறிவிட்டால் மட்டும், தப்பித்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம் என்று அறி வுறுத்தியிருக்கிறது.

வெளிநாட்டு நீதிமன்றத்தில், மனைவியின் ஒப்புதல் இல்லாமல் மணவிலக்குப் பெற்று, மறுமணம் செய்துகொண்ட நபர் மீது இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய திருமணச் சட்டப்படி மணம் முடித்தவர்களுக்கு, வெளிநாட்டு நீதிமன்றங்கள் அளிக்கும் மணவிலக்கு, இந்தியாவில் செல்லுபடியாகாது என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி யிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *