கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது: தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகிறது

* தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

* பீகாரில் நடைபெற்றது போல, அதிமுகவை பாஜகவுடன் சேர்த்து விடுங்கள், எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ‘மகளிர் இடஒதுக்கீட்டுடன் இணைத்து பாஜக தந்திரம்’-தொகுதி மறுவரையறைக்கு ‘இண்டியா’ கூட்டணி எதிர்ப்பு.

* எவரையும் கலந்து ஆலோசிக்காமல் முன்மொழியப் படும் மறுவரையறை மசோதா, தலையங்கம் சாடல்.

* பெண்கள் இட ஒதுக்கீடு, மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் டில்லி செல்கிறார். தென் மாநிலங்கள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டுகோள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தொகுதி மறுவரையறை மூலம் ஓபிசி பிரிவு உரிமைகளை பிரதமர் மோடி திருடுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு. மோடி விரும்புவது நடந்தால், சிறிய மாநிலங்கள், தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கணிசமாகப் பாதிக்கப்படும், மேலும் அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும், ராகுல் காந்தி கண்டனம்.

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஊதிய நெருக்கடி குஜராத் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது; ஊதிய நிலுவைத் தொகைகள் மாதக்கணக்கில் பாக்கியுள்ளன.

* ராஜஸ்தான் பாஜக அரசின் காவிமயமாக்கும் இன்னொரு முயற்சி: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பெயர்களுக்குப் பதிலாக, கலாச்சார ரீதியாக வேரூன்றிய மாற்றுப் பெயர்களை வைப்பதை நோக்கமாகக் கொண்ட ராஜஸ்தான் அரசின் ‘சார்த்தக் நாம் அபியான்’ திட்டம், கல்வியைக் காவிமயமாக்கும் ஒரு நடவடிக்கை என்று விமர்சகர்கள் குற்றச்சாட்டு

தி இந்து:

*மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள், பட்டியல் ஜாதி (எஸ்சி), பட்டியல் பழங்குடி (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை (ஓபிசி) சேர்ந்த பெண்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி வலியுறுத்தல்.

*முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை எவ்வாறு அரசியல் வரைபடத்தை மாற்றியமைக்கும்? 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறு ஒதுக்கீடு செய்யப்படும் போது, தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தங்கள் நாடாளுமன்றத் தொகுதி பங்கில் அதிக இழப்பை சந்திக்க நேரிடும்; அதேவேளையில், ஹிந்தி பேசும் மய்யப்பகுதி மாநிலங்கள் விகிதாச்சாரத்திற்கு மீறிய ஆதாயத்தை பெறும் என்கிறார்கள் கட்டுரையாளர்கள் சீனிவாசன் ரமணி & சாம்பவி பார்த்தசாரதி

*ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரை யறை நடவடிக்கை ‘பஞ்சாபிற்கு எதிராக அப்பட்டமான பாகுபாடு காட்டுவதாக உள்ளது’ என அகாலி தளம் விமர்சனம். இந்த நடவடிக்கையானது, நாட்டில் ஏற்கனவே வலுவிழந்துள்ள கூட்டாட்சி அமைப்புக்கு ஒரு ‘மரண அடியாக’ அமையும் என அகாலி தளம் தலைவர் சுக்பீர் பாதல் வர்ணித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தொகுதி மறுவரையறை நடவடிக்கை நாடாளுமன்றத்தில் தென் இந்தியாவின் குரலை ஒடுக்கி, மூச்சுத்திணறச் செய்யும்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *