சோனியா காந்தி மீது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பொய்ப் பிரச்சாரம் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

1 Min Read
- Advertisement -

வயநாடு நவ 13  தனது தாயார் சோனியா காந்தி இந்தியாவுக்கு வந்த நாள் முதலே, அவரைப் பற்றி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பல பொய்ப் பிரச்சாரங்களையும் கட்டுக்கதைகளையும் பரப்பி வருவதாக வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி எழுதிய ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதைப் புத்தகம் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் நேரு மற்றும் காந்தி குடும்பத்தின் வரலாற்றுத் தவறுகளை மறைக்கும் முயற்சி என பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டு, புத்தகத்தின் கருத்துகளுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வயநாட்டில் செய்தி யாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவுக்கு வந்த நாள் முதல் எனது தாயாரின் வாழ்நாள் முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் அவரைப் பற்றிப் பல பொய்ப் பிரச்சாரங்களையும் கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக இவர்களது பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்த எனது தாய் சோனியா காந்தி, தற்போது தனது சுயசரிதையின் மூலம் தனது தரப்பிலான உண்மைகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தி யுள்ளார். தனது கதையைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது.”

பெட்ரோல் கலப்படம் குறித்து விமர்சனம்

மேலும், நாடு முழுவதும் பெட் ரோலில் அதிக அளவு எத்தனால் கலக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா காந்தி பதிலளித்தார். “பெட்ரோல் கலப்படம் உள்ளிட்ட நாட்டில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *