த.வெ.க. ஆட்சி குறித்து இப்போது மதிப்பிட இயலாது என்கிறார் திருமாவளவன்!

1 Min Read

திருச்சி, ஜூன் 18– தவெகவின் ஒரு மாத கால ஆட்சி குறித்து இப்போது மதிப்பீட்டுச் சொல்ல இயலாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து திமுகதான் பதில் சொல்ல வேண்டும்.

தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்போது அவர்களுக்கு கற்றுக் கொள்ளக்கூடிய காலம். எனவே, இந்த ஒரு மாத ஆட்சி பற்றி இப்போது மதிப்பீடு சொல்ல இயலாது.

அதிமுகவில் நடப்பது அவர் களுடைய உள்கட்சி விவகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த பதவியிலிருந்து விலகும் அளவுக்கு உள்ளே என்ன நெருக்கடி என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடியது. திராவிட இயக்கம் என்ற முறையில் அதிமுக வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழ்நாடு அரசியலுக்கு நல்லது.

ஆளூர் ஷாநவாஸ் தலைமை யோடு தொடர்பில் இருக்கிறார். வெளிநாடு சென்று திரும்பியுள்ள அவர் விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கவில்லை என்பதைத் தவிர அவருக்கு வேறு வருத்தம் இல்லை.

வன்னிஅரசு அமைச்சர் பதவியேற்கும் விழாவுக்கு அவர் தாமதமாக வந்த நிலையில் அவருடைய வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், திட்டமிட்டு அவரைப்பற்றி திரும்பத் திரும்ப அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கட்சிக்குள் எந்த குழப்பமும், பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *