வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 30- திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில், முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிலையில், முதல் அலகில் ‘பாய்லர் டியூப் பஞ்சர்’ (Boiler Tube Puncture) ஏற்பட்டதால், நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோடை வெயில் காரணமாக மாநிலம் முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டிருப்பது தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மின் உற்பத்தியை விரைவில் மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *