செயற்கை கையுடன் வயலின் வாசித்து கின்னஸ் சாதனை

2 Min Read
- Advertisement -

டோக்கியோ, நவ.13- செயற்கைக் கையுடன் வயலின் வாசித்து உலக சாதனை படைத்த ஜப்பானியப் பெண் கலைஞர் மனாமி இடோ (வயது 42), 2027ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைப் புத் தகத்தில் அதிகாரப்பூர்வ மாக இடம் பிடித்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த மனாமி இடோ, சிறுவயது முதலே வயலின் வாசிப் பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால், கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இவர் தனது வலது கையை இழந்தார். இதனால் தனது இசை வாழ்க்கை முற்றிலுமாக முடிந்துவிட்டதாகவே அவர் கருதினார்.

இருப்பினும், மனம் தளராத மனாமி இடோ, தனக்காகவே தனித்துவமாக வடி வமைக்கப்பட்ட செயற்கை கையை பொருத்திக் கொண்டு மீண்டும் வயலின் வாசிக்க தீவிர பயிற்சி மேற்கொண்டார். தொடர் முயற்சியின் பலனாக, கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பார்வையாளர்கள் முன்னிலையில் வயலின் வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இவரது இந்த தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை பாராட்டி, “முழுமையான செயற்கைக் கையுடன் வயலின் வாசித்த முதல் கலைஞர்” என்ற பெருமையுடன் 2027ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தனது சாதனை பயணம் குறித்து மனாமி இடோ நெகிழ்ச்சியுடன் கூறுகையில், “விபத்தில் வலது கையை இழந்த பிறகு, சாப்பிடும் குச்சி களை கூட பிடிக்க முடியாமல் தவித்தேன். இதை பார்த்த என் தாயார், ‘நீ இனி வயலின் வாசிக்க முடியாது’ என்று வேதனையுடன் கூறினார். ஆனால், ஒரு நாள் எனக்காக வயலின் வாசித்துக் காட்டுமாறு என் தாயார் முன்பு கேட்டிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தாலேயே மீண்டும் வயலின் வாசிக்க தொடங்கினேன்.

ஆரம்பத்தில் என்னை பிறர் பார்ப்பதை நான் விரும்பவில்லை, பலவீன மாக உணர்ந்தேன். பொது மேடையில் வாசிக்கும் தன்னம்பிக்கையை பெற எனக்கு 3 ஆண்டுகள் ஆனது. எனக்காக செயற்கைக் கையை உருவாக்கி தந்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கினேன்” என்றார்.

பாராலிம்பிக் நீச்சல் வீராங்கனையான மனாமி இடோ, வயலின் கலைஞராக மட்டுமின்றி, ஜப்பானில் செயற்கைக் கையுடன் பணியாற்றிய முதல் செவிலியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *