அய்.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர் பதவி தஜிகிஸ்தானுடன் மோதும் இந்தியா..! பரப்புரையைத் தொடங்குகிறார் வெளியுறவு அமைச்சர்

1 Min Read

வாசிங்டன், ஜூலை 14- அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் (UNSC) தற்காலிக உறுப்பினர் பொறுப்பை கைப்பற்றுவதற்கான தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச் சாரத்தை இந்தியா இன்று முறைப்படி தொடங்குகிறது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள அய்நா தலைமையகத்தில் நடை பெறும் சிறப்பு நிகழ்வில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த பயணத்தின் போது அவர் அய்நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸையும் சந்தித்துப் பேசுகிறார்

ஆசிய-பசிபிக் பிராந்தியத் திற்கான ஒரே ஒரு தற்காலிக இடத்திற்காக இந்தியா இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் இந்தியாவின் நேரடிப் போட்டியாளராக தாஜிகிஸ்தான் களம் இறங்கியுள்ளது. 57 இஸ்லா மிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), தாஜிகிஸ்தானுக்கு ஏற்கனவே தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இந்தத் தேர்தல் இந்தியாவின் தூதரகத் திறமைக்கு ஒரு முக்கிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இந்தியாவுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிஜி, இலங்கை மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இது தவிர அய்ரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் ஆதரவையும் பெற இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அய்நா பாதுகாப்பு கவுன்சி லின் தற்காலிக உறுப்பினர் தேர்தல்களில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு வலுவான மற்றும் வெற்றிகரமான பின்னணி உள்ளது. இந்தியா இதுவரை 8 முறை (1950-–51, 1967-–68, 1972-–73, 1977-–78, 1984-–85, 1991-–92, 2011-–2012 மற்றும் 2021-20–22) தற்காலிக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளது. குறிப்பாக, 2011-20–12 தேர்தலில் மொத்தம் உள்ள 190 வாக்குகளில் 187 வாக்குகளையும், கடந்த 2021-20–22 தேர்தலில் 193 வாக்குகளில் 184 வாக்குகளையும் பெற்று இந்தியா மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *