ஒன்றிய அரசு உத்தரவு!
தஞ்சாவூர், நவ.13 டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி தீவிர மாக நடைபெற்று வரும் நிலையில், பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்பு இப்பயிர்களைக் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ஆம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடைமடைப் பகுதி விவசாயிகள் மற்றும் தாமதமாக சாகுபடி செய்த விவசாயிகள் உரிய காலத்தில் காப்பீடு செய்ய முடியுமோ என்ற கவலையில் இருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்த காலக்கெடு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுடிக்காக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும், அந்த நீர் முறையாக டெல்டாவின் கடைமடைப் பகுதிகளைச் சென்றடைவதில் சிக்கல் நிலவியது.
எனினும், தற்போது தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தீவிர மாகப் பெய்து வருவதால், விவ சாயிகளுக்குத் தேவையான பாசனத் தேவை இயற்கையாகவே பூர்த்தியாகி வருகிறது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் அனை வரும் சாகுபடிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக, ஒன்றிய அரசின் ‘பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 540 வரை பிரீமியம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும், இதற்காக மாநில அரசு தன் பங்களிப்பாக ரூ. 650 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் இருந்த நிலையில், தற்போது அது டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
