சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு உத்தரவு

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ.13 சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ. 1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடி யிருப்புகள் கட்டுவதற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் வகையில், குடிசை இல்லாத் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளை உருவாக்குவதில் முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பிரிவினரின் (EWS) வாழ்வாதாரத்தை மேம்படுத்துவ தற்கான ஒரு முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) பழுதடைந்த குடியிருப்புகளை மறு கட்டுமானம் செய்வதற்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பிரத்யேக மாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டம் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன வீட்டுவசதி அலகுகளை உள்ளடக்கியது.

அதன்படி, ரூ. 1,401.75 கோடி மதிப் பீட்டில், சென்னை, அனாதைக்குப்பம் திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடிக் குடியிருப்புகள், பழைய பிளாக் வியாசர்பாடி திட்டப்பகுதியில் 1,158 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஃபோர்ஷோர் எஸ்டேட் திட்டப் பகுதியில் 1,484 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ருக்மணி நகர் திட்டப்பகுதியில் 111 அடுக்குமாடிக் குடியிருப்புகள், முல்லை நகர் திட்டப்பகுதியில் 462 அடுக்குமாடிக் குடியிருப்புகள், உதயசூரியன் நகர் திட்டப்பகுதியில் 850 அடுக்குமாடிக் குடியிருப்புகள், பச்சைக்கல் வீராசாமி தெரு திட்டப்பகுதியில் 912 அடுக்குமாடிக் குடியிருப்புகள், மேற்குக் கல்லறை சாலைத் திட்டப்பகுதியில் 792 அடுக்குமாடிக் குடியிருப்புகள், கக்கன் காலனி திட்டப்பகுதியில் 324 அடுக்குமாடிக் குடியிருப்புகள் என மொத்தம் 9 திட்டப்பகுதிகளில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *