அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இது! எதிர்க்கட்சித் தலைவர்களின் கைதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

1 Min Read
- Advertisement -

சென்னை,அக்.13- நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைக் காப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடியதற்காக முன்னாள் முதலமைச்சர்களான பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு தடுப்புக் காவலில் அடைத்துள்ளது.

ஆனால், தேசத் துரோகச் செயலுக்காக நீதிமன்ற விசார ணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “இசட் பிளஸ்” பாதுகாப்புடன் சுதந்திரமாக உலா வருகிறார்! இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

எஸ்அய்ஆர்-க்குப் பின்னணியில் உள்ள சதி முழுமையாக அம்பலமாகி விட்டது. இனியும் அதை மறைக்க முடியாது! டில்லியைப் பூட்டி வைப்பதாலோ, இணையச் சேவையைத் துண்டிப்பதாலோ, அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதாலோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டையும் எத்தனை நாள்களுக்குத்தான் ஒன்றிய அரசால் முடக்கி வைத்திருக்க முடியும்?

இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள மூடர்கூடத் த.வெ.க. அரசு, தனது டில்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் துடிக்கிறது. அதற்காக, எஸ்அய்ஆர்-க்கு எதிராகவும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராடும் செயற்பாட்டாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். எஸ்அய்ஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்த அனைவரும் உரிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *