ஜெனீவா, நவ. 11- ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அய்நா மனித உரிமைகள் கவுன்சில் அய்நா உறுப்பு நாடுகளான 193 நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து உலகளாவிய காலமுறை ஆய்வு என்ற செயல்முறையின் கீழ் பொதுவாக நான்கு முதல் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்கிறது. அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஓராண்டுக்கு முன்பே தனக்கான ஆய்வு வாய்ப்பை தவிர்த்துவிட்டது.
அமெரிக்க அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளக் கூடும் என்ற நம்பிக்கையில் 2025ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற இருந்த ஆய்வானது நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அனுப்பிய மின்னஞ்சலில், அய்நா மனித உரிமைகள் கவுன்சில் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடு பவர்களை இந்த அமைப்பு கண்டிக்கத் தொடர்ந்து தவறி வருகின்றது” என்று தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நாட்டின் பங்கேற்பு அவசியம் என்பதால் ஆய்வைத் தொடர்ந்து நடத்த முடியாது என்றும் அய்நா மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
