இறந்த கணவரின் கடனுக்கு மனைவி பொறுப்பல்ல : உயர் நீதிமன்றம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அலகாபாத், செப்.21 கணவர் கடன் பெற்றுவிட்டு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி அந்தக் கடனுக்கு பொறுப்பாக மாட்டார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவர் இறந்த நிலையில், அவர் பெற்ற கடனுக்காக, மனைவியின் வைப்பு நிதிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.19.90 லட்சத்தை வட்டியும் முதலுமாக, அவரது வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

கணவர் பெற்ற கடனுக் காக, மிக வெறுக்கத்தக்க வகையில், வங்கி நடைமுறை அமைந்திருப்பதகாவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக் கிறது. கடன் நிலுவைத் தொகைகள் வசூலிக்கப்பட்ட விதத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, பாதிக்கப்பட்டவருக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

நேஹா மிஸ்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில், லக்னோவில் உள்ள மருத்துவ மனையில் பேராசிரியராக இருந்த தன்னுடைய கணவர் 2021ஆம் ஆண்டு கரோனாவால் இறந்து விட்டார். அவர் பாரத ஸ்டேட் வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தார். கடன் பெறும் போது, அதற்கான காப்பீடு எடுக்கப்பட்டு ரூ.8,803 கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனி நபர் கடனைப் பெற தான் எந்த கையெழுத்தும் போட வில்லை. கடன் அளித்த வங்கிக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்க தாக்கீது பிறப்பிக்கப்பட்டு, தன்னுடைய ஊதியம் பெறும் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. தன்னுடைய நிலையான வைப்புக் கணக்கிலிருந்து ரூ.19.90 சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு கடன் தொகை கழிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது என்று தெரிவித் திருந்தார்.

இந்த நிலையில், நிலை யான வைப்புத் தொகைக்கான வட்டியுடன், 19.90 லட்சத்தை வட்டியும் முதலுமாக நான்கு வாரத்தில், நேஹாவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *