புதுடில்லி, நவ 10 நாடு முழு வதும் தீபாவளியின்போது போதிய முன்னெச்சரிக்கையின்மை மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் பயங்கர விபத்துகள் இந்த ஆண்டும் தொடர் கதையாகியுள்ளன. அன்று நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் ஒரு சிறுவன் உள்பட பல உயிர்கள் பறிபோயுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டில்லி நரேலா பகுதியில் தீபாவளியின்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் பட்டாசு வெடித்துக் கொண்டி ருந்தபோது, அங்கிருந்து பறந்த ராக்கெட் ஒன்று அவனது வயிற்றில் பயங்கரமாக பாய்ந்தது. இதனால் படுகாயமடைந்த அந்த சிறுவன் அந்த இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தான். இது அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
ராஜஸ்தானில் கோர விபத்து: இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் சாலையோரம் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி அருகில் இருந்த பட்டாசு கடை மீது விழுந்ததால் கோர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் உடல் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அங்குள்ள 3 கடைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீக்கிரையாகின. விபத்து நடந்த பகுதியில் காணாமல் போன 3 பேரை மீட்பு படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மகாராட்டிரா பிற மாநிலங்களில்….
மும்பை: லோகன்ட்வாலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
புனே: மகாராட்டிராவின் புனே நகரில் மட்டும் ஒரே நாளில் பட்டாசு களால் 63 இடங்களில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
நாக்பூரிலுள்ள வாகன விற்பனையகத் தில் பட்டாசு தீப்பொறிப் பட்டு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரபிரதேசம்: பாண்டா பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் ஏற் பட்ட தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்: நேரு மார்க்கெட்டில் அமைந்துள்ள 12 கடைகள் பட்டாசு விபத்தால் தீயில் எரிந்து சாம்பலாகின.
தீபாவளியின்போது கவனக்குறை வால் பல குடும்பங்களில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச் சியையும், கவலையையும் ஏற்படுத்தி யுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகள் கூடுதல் பாதுகாப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் காவல் துறையினரும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
