60,000 பேரை வேலையை விட்டு தூக்கும் மைக்ரோசாப்ட் 2 கோடி ஏஅய் ஏஜெண்டுகளைக் களமிறக்கத் திட்டம்?

3 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.10 உலகப் புகழ்பெற்ற முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது சுயமாகப் பணியை விட்டு விலகும் வாய்ப்பை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா சில மாதங்களுக்கு முன்பு பேசிய காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி அய்டி உலகையே கலங்க வைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், லிங்க்ட்இன் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேனுடன் ஒரு பேட்டியில் சத்யா நாதெள்ளா கலந்து கொண்டார். அப்போது நிறுவனங்களின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், எங்கள் நிறுவனத்தில் 2 லட்சம் மனித ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய 20 லட்சம் முதல் 2 கோடி ஏஅய் ஏஜென்ட்கள் வரக்கூடும்” என்று விவரித்திருந்தார்.

1980-களில் அலுவலகங்களில் கம்ப்யூட் டர்கள் வந்தபோது, எல்லோரும் தட்டச்சு செய்வார்கள் என்பதை யாரும் நம்பவில்லை. அதேபோலத்தான் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு உதவியாக செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்கள் செயல்படும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால், இப்போது 60,000 பேருக்கு வெளியேறும் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கும் சூழலில், அப்படி யானால் மனிதர்களுக்குப் பதிலாக ஏஅய் கம்ப்யூட் டர்களை மைக்ரோசாப்ட் களமிறக்குகிறதா?” என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

60,000 ஊழியர்களுக்கான திட்டம் என்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த அக்டோபர் 26 அன்று இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நான்கு நாடுகளில் பணிபுரியும் குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் நான்கில் ஒரு பகுதியினர் (Level 70 மற்றும் அதற்குக் கீழ் உள்ளவர்கள்) இந்த வரம்பிற்குள் வருகின்றனர். சுயமாக விலக விரும்புபவர்களுக்குச் சிறப்புப் பணப் பலன்கள், நிதி உதவி மற்றும் வேறு வேலை தேடுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், இது கட்டாயப் பணிநீக்கம் அல்ல என்றும், இதில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே (அதாவது 3,000 பேருக்குக் கீழ்) இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விலகுவார்கள் என்றும் மைக்ரோசாப்ட் கணித்துள்ளது.

நிறுவனம் சொல்வது என்ன?

இது மனிதர்களுக்குப் பதிலாக ஏஅய்-யை கொண்டு வருவதற்கான ஆட்குறைப்பு அல்ல என்று மைக்ரோசாப்ட் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியர்களை மறுசீரமைக்கும் சாதாரண நடவடிக்கை மட்டுமே என்று மனிதவளத் துறை தலைமை அதிகாரி ஆமி கோல்மேன் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், ஒருபுறம் ஊழியர்களுக்கு வெளியேறும் திட்டம் வழங்கிவிட்டு, மறுபுறம் ஏஅய் தொழில்நுட்பக் கட்டமைப்புக்காகவும், கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்காகவும் மைக்ரோ சாப்ட் பல பில்லியன் டாலர்களை வாரி இறைத்து வருகிறது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் உலகெங்கும் உள்ள பொறியாளர்களிடையே எழுந்துள்ளது.

மனித வேலைகளுக்கு ஆபத்தா?

சத்யா நாதெள்ளா சொல்வதுபடி பார்த்தால். ஏஅய் என்பது மனிதர்களை வேலையிலிருந்து தூக்குவதற்காக அல்ல.. மனிதர்களின் வேலை வேகத்தை அதிகரிப்பதற்கான ஒரு கருவிதான். கணினி Coding எழுதுவது போன்ற பணிகளில் சிறிய தவறுகளைத் திருத்துவது முதல் பெரிய பணிகளை முடிப்பது வரை ஏஅய் தானாகவே செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்கள் வெறும் ஏஅய் திறன்களை மட்டுமே பேசாமல், இதனால் புதியதாக என்ன மாதிரியான வேலைகள் உருவாகும், அதற்கு என்ன ஊதியம் கிடைக்கும், அந்தப் புதுத் திறமைகளைத் தொழிலாளர்கள் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும் என்று நாதெள்ளாவே முன்பே குறிப்பிட்டிருந்தார்.அய்டி துறையில் உள்ளவர்கள் வெறும் பழைய திறன்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஏஅய் தொழில்நுட்பங்களைச் சரியாகக் கையாளக் கற்றுக் கொள்வதுதான் வேலைப் பாதுகாப்பிற்கு ஒரே வழி என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *