பிரதமரின் பதிவு முடக்கம் தொழில்நுட்பக் கோளாறா? ஹேக்கர்களின் திருவிளையாடலா?

2 Min Read

புதுடில்லி, ஜூலை 29 பிரதமர் நரேந்திர மோடி வினாத்தாள் கசிவு தொடர்பாக வெளியிட்ட காணொலிப் பதிவு முகநூலில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தவறுதலாக இந்தப் பதிவு முடங்கியது” என்று மெட்டா நிறுவனம் விளக்கமளித்து, அப்பதிவை மீண்டும் நேரலைக்குக் கொண்டுவந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் பல முக்கியக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெளியிடும் நேரலை காணொலிகளுக்கோ அல்லது பதிவுகளுக்கோ ஏற்படாத இந்த ‘தொழில்நுட்பக் கோளாறு’, பிரதமரின் முக்கிய காணொலிப் பதிவுக்கு மட்டும் ஏற்பட்டது எவ்வாறு என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.

பிரதமரின் கணக்கு அல்லது குறிப்பிட்ட பதிவு எதுவும் அடையாளம் தெரியாத நபர்களால் ஊடுருவப்பட்டதா? அல்லது மெட்டாவின் தானியங்கி உள்ளடக்கக் கண் காணிப்பு தவறாகச் செயல்பட்டதா? என்பது குறித்து மெட்டா நிறுவனம் தெளிவான மற்றும் விரிவான தொழில்நுட்ப விளக்கத்தை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் இந்த விளக்கத்தை இந்திய அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் உலகளாவிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி, இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விளக்கத்தைக் கேட்டுள்ளது.

நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வப் பதிவு தற்காலிகமாக முடக்கப்பட்ட நிகழ்வு டிஜிட்டல் இந்தியா எனப்படும் மின்னணு மயமாக்கல் திட்டப் பாதுகாப்பில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சரகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

தமிழ்நாட்டுக்கு இன்றுமுதல்
நாள்தோறும் 3,500 கன அடி காவிரி நீா்

கருநாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

புதுடில்லி, ஜூலை 29 தமிழ்நாட்டுக்கு இன்று (29.7.2026) தொடங்கி அடுத்த 15 நாள் களுக்கு தினமும் 3,500 கன அடி (4.536 டிஎம்சி) காவிரி நீரை திறந்துவிடுமாறு கருநாடக மாநிலத் துக்கு காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உத்தர விட்டுள்ளது.

காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 139-ஆவது ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு குழுவின் தலைவா் வினீத் குப்தா தலைமை வகித்தார். தமிழ்நாட்டின் சார்பில் திருச்சி மண்டல நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் ஏ.ஜெயகுமாரி  காவிரி ஆறு பாய்ந்தோடும் மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்றனா். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திடம் கருநாடக அரசு முறையிடவுள்ளதாக தகவ லறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *