சீனாவின் கிழக்கு மாகாணங்களை சேதப்படுத்திய ‘பவி’ புயல்.!! வரலாறு காணாத கனமழை – நிலச்சரிவு

2 Min Read

ஜெஜியாங், ஜூலை14- ஜெசீனாவின் கிழக்கு மாகாணங்களில் 2 முறை கரையை கடந்த பவி (bavi) புயல், வரலாறு காணாத பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் மிக கனமழையும், சூறாவளி காற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளில் தீவிரமடைந்த பவி புயல், ஆசிய நாடுகளின் பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. குறிப்பாக பிலிப்பைன்ஸில் பெய்த கனமழை மற்றும் இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் ஜப்பான் நாட்டை ஒட்டிசென்ற இந்த புயல் தைவானை தாக்கிய பிறகு, கடந்த சனிக்கிழமையன்று இரவு 11.20 மணியளவில் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டைஜோ நகரில் கரையை கடந்தது. இது முழுமையான புயலாக இருந்த போது ஃபிரான்ஸ் நாட்டின் அகலத்திற்கு பரவி இருந்ததாக சீனாவின் வானிலை ஆய்வு மய்யம் கூறி இருந்தது.

புயல் கரையை கடந்த போது மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை பெய்தது. இதனால் சீனாவின் கிழக்கில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் பல இடங்களில் வெள்ளபெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன, பல நூறு கிராமங்கள் இருளில் மூழ்கின. புயலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக ஜெஜி யாங் மாகாணத்தில் மட்டும் சுமார் 17 லட்சம் மக்கள் பாது காப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அண்டை மாகாணமான ஃபுஜி யானிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்பார்த்ததை போலவே ஜெஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல கிராமங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

புயலின் தாக்கம் காரண மாக நேற்று கிழக்கு சீனா முழுவதும் நேற்று 1200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல நகரங்களில் பள்ளி மாற்று கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டு உள்ளது. பல இடங்களில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. மொத்தத்தில் பவி புயல் சீனாவின் கிழக்கு மாகாணங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *