வெள்ளை மாளிகையில் குத்துச்சண்டை போட்டி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயம் வெளியிட்ட டிரம்ப் குடும்பத்தினர்

வாசிங்டன், ஜூன் 12-  அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெள்ளை மாளிகையில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குத்துச்சண்டைப் போட்டி

வெள்ளை மாளிகையில் தொழிற்முறை விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குத்துச்சண்டை போட்டியை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினர் புதிய அதிகாரப்பூர்வ நினைவு நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரால் நடத்தப்படும் ‘டிரம்ப் ஆர்கனைசேஷன்’ நிறுவனம் இந்த வணிக முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சேகரிப்பு நாணயங்களின் அதிகபட்ச விலை, பிரீமியம் தங்கப்பதிப்பிற்கு 11 ஆயிரத்து 999 டாலர்கள் (ரூ.10 லட்சம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இந்த நாணயங்கள் விற்கப்படுகின்றன. டிரம்ப் அவர்களால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வ நாணயங்கள் இவை மட்டுமே என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

உலக செய்திகள்

குவைத் விமான நிலையம்
தற்காலிக மூடல்

குவைத், ஜூன் 12-  ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல். அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குவைத்தில் உள்ள அந்நாட்டு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. குவைத்திற்கு வந்த விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *