“விஜய் என்ற பெயரில் திடீர் எழுத்தாளர்கள்… எப்படி முளைக்கிறார்கள்?” தவெக அரசுக்கு பெ. சண்முகம் கேள்வி!

- Advertisement -

சென்னை, நவ.8 கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: கோவை பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்ற நூல் கொள்முதலில் நடைபெற்ற மோசடியை வெளி கொண்டு வந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த ஊழல் மூடி மறைந்திருக்கும். நூலகத்தில் நூல்களுக்கிடைய  குப்பைகளை வைத்திருக்கின்றனர்.

புத்தகங்களின் தலைப்புகள் மற்றும் அதனுடைய கருத்துக்களை பார்க்கும்போது மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக தெரிய வருகிறது. அதனை முழுமையாக விசாரணை செய்து அதற்கு காரணமாக யாராக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். விஜய் என்கிற பெயரில் ஏராளமான எழுத்தாளர்கள் உற்பத்தியாகி இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து விஜய் என்கிற பெயரில் ஒரு புத்தகம் கூட இல்லை. இது வழக்கமான காவல்துறை விசாரணை போல நடத்தினால் முழு உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது எனவே சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து இதனை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மோசடியான, உண்மைக்கு தொடர்பான நூல்கள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் குழுவைக் கொண்டு அதன் நூல்களை அப்புறப்படுத்தும் வேலையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த நூலை கொள்முதல் செய்து அதனை நூல்களை வாங்கி நூலகத்தில் வைத்திருப்பதற்கும் பரிந்துரைப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. ஏதோ சில எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று அகல் விளக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் மோகன் தெரிவித்திருக்கிறார். அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒரு அறிவு மோசடி இதனை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது.  நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் குழுவை அமைத்தது. ஆனால் இன்று அந்த குழு கலைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழு கலைக்கப்பட்டு இருக்கக்கூடாது. அரசியல் சாசனம் பாதிக்கப்படக்கூடாது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *