கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கடலூர், அக்.6- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் உள்ள வீராணம் ஏரிக் கரையில் உள்ள திருச்சின்னபுரம் கிராமத்தின் அருகே வீராணம் ஏரிக்குள் நின்று கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவர் பி. விநாயகமூர்த்தி தலைமையில் நேற்று (5.10.2026) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதி காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியாகும். மேட்டூரில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படவில்லை.

விவசாய சங்கங்கள் கடுமையாக போராடியதன் விளைவாக கூடுதல் தண்ணீர் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகிய நீர் நிலைகளில் திறக்கப்பட்டது.

ஆனால், பாசனத்திற்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. சென்னைக்கு மட்டுமே குடிநீருக் காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் விவசாய சங்கங்கள் அறிவித்தன.

இதனை அடுத்து வீராணம் ஏரியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இதுபற்றி விவசாய சங்க தலைவர் பி. விநாயகமூர்த்தி கூறியதாவது:

“வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். மகாராட்டிரத்தில் அறிவித்தது போன்று வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 30,000 அளிக்க வேண்டும்.

கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக உடனடியாக கனரக இயந் திரங்களை வைத்து தூர்வார வேண்டும். விவசாயி களின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் இருக்கும் சிதம்பரம் செயற்பொறியாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

தகவல் அறிந்த சேத்தியத் தோப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமலிங்கம், ஆய்வாளர் பாபு, வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் காட்டுமன்னார் கோயில் தனியார் திருமண மண்டபத்தில் கோட்டாட் சியர் மற்றும் சிதம்பரம் செயற் பொறியாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *