இந்நாள் – அந்நாள்

6 Min Read
- Advertisement -

ஹிந்து மத வெறியர்கள் பச்சைத் தமிழர் காமராசரைத்
தீயிட்டுக் கொல்ல முயன்ற நாள் இன்று (07-11-1966)

 

பச்சைத் தமிழர் காமராசர் அவர்களை ஹிந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்த வர்கள்  தலைநகர் புதுடில்லியில் தீயிட்டுக் கொல்ல முயன்ற நாள்  இன்று (07-11-1966).

பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர வற்புறுத்தி ஹிந்துத்துவ அமைப்பினரும், ஹிந்துச் சாமியார்களும் புதுடில்லி நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிப்  பேரணி சென்றனர் (7.11.1966). நாடாளுமன்றக் கட்டடம் மூடப்பட்டிருந்தது.

இதனால் கோபமடைந்தவர்கள் கடும் வன்முறை களில் ஈடுபட்டனர். கூட்டம் கூட்டமாகப் பிரிந்து டில்லியின் வீதிகளில் வன்முறைகளில் இறங்கினர்.

இந்தப் பிரச்சினையில்  ஹிந்துத்துவ வெறி யர்களின் வன்முறைகளைக் காமராசர் கடுமை யாகக் கண்டித்து வந்தார். அதே நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில் அவர்களின் கோரிக் கைகளுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றவும் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்திருந்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள்  டில்லி ஜந்தர் மந்தரில் இருந்த காமராசரின் அதிகாரப் பூர்வ இல்லத் தினை  முற்றுகையிட்டனர். கதவுகளை உடைத்தனர். பெட்ரோல் ஊற்றி வீட்டிற்குத் தீ வைத்தனர்.

அப்போது காமராசரிடம் சமையல் காரராகப் பணியாற்றி வந்த அவரின் நம்பிக்கைக்குரிய அம்பி,   இத்தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இருந்தும் அவர் காமராசரை எச்சரித்துப் பின் வாசல் வழியாக அவர் தப்பித்துச் செல்வதற்கு உதவினார். காமராசரும் உயிர் பிழைத்தார்.

 

“ரிவோல்ட்” ஆங்கில இதழ் வெளிவந்த நாள் இன்று (07-11-1928)

இந்நாள் - அந்நாள்

“ரிவோல்ட்” ஆங்கில இதழ் திராவிட இயக்கத்தின் சார்பாக, முதன் முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்த வார இதழ். 1928 இல், ஈரோட்டில் இருந்து வெளிவந்தது. தந்தை பெரியார் மற்றும் எஸ். இராமநாதன் “ரிவோல்ட்” இதழின் ஆசிரியர்களாக இருந்தனர். பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக நாகம்மையார் செயல்பட்டார்.

தமிழ்நாட்டைக் கடந்து தமிழ் மொழி அறியாத பிற மக்களும் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளை அறிய வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார். அந்த நோக்கத்தில், ஈரோட்டில், 1928 ஆம் ஆண்டு நவம்பர் 7 இல், தந்தை பெரியார் தொடங்கிய ஆங்கில இதழ் ரிவோல்ட் (Revolt). கோவை ரத்தின சபாபதி தலைமையில் நடைபெற்ற விழாவில், சவுந்தரபாண்டியன், “ரிவோல்ட்” இதழின் முதல் பிரதியை வெளியிட்டார்.

“ரிவோல்ட்” என்பதற்கு ‘கட்டுப் பாட்டை உடைத்தல்’ என்பது பொருள்.

“ரிவோல்ட்” இதழ் முதலில் புதன்கிழமைதோறும் வெளிவந்து. பின்னர் ஞாயிற்றுக்கிழமை வெளி யானது. முதலில் ஈரோட்டிலிருந்தும், சில காலம் சென்னையில் இருந்தும் பின்னர் மீண்டும் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது.

இதன் ஆண்டு சந்தா ரூபாய் நான்கு. மாணவர்களுக்கு ரூபாய் மூன்று. வெளிநாடுகளுக்குச் சந்தா ரூபாய் அய்ந்து என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தனி இதழின் விலை ஒரு அணா. 10 பக்கங்களில் இவ்விதழ் வெளி வந்தது. ஒரு அணா ஸ்டாம்ப், முகவரியுடன் அனுப்புவர்களுக்கு மாதிரி இதழ் அனுப்பப்பட்டது.

 

“பெரியார் பேருரையாளர்” புலவர் மா.நன்னன் அவர்களின் நினைவு நாள் இன்று (07-11-2017)

இந்நாள் - அந்நாள்

தமிழை வடமொழி கலப்பு இல்லாமல் அடுத்த தலை முறையிடம் கொண்டு செல்ல வேண்டும், எளிய முறையில் சாதாரண மக்களும் தமிழை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது பாடு பட்டவர் நன்னன் அவர்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

“தந்தை பெரியாரின் கொள்கைகளை ஓரளவு மட்டுமே புரிந்துகொண்டு அதில் ஈடுபட்டு ஓரிரண்டு ஆண்டுகளே ஆகி முரட்டுப் பேச்சாளராக இருந்த எமது முரட்டுப்பேச்சை விழா முடிந்த பின் பெரியார் பாராட்டியதோடு அதில் இருந்த சில குறைகளையும் கூறிய முறையையும் சுட்டி எம்மைத் திருத்தினார்“ என்று குறிப்பிடுகிறார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று, தம் குடும்பத்தின் வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர். எளிமையாகப் பெரியாரியலைப் பகுத்துப் புரிந்து கொள்ளும் வகையில் பெரியாரியல், பெரியார் கணினி, பெரியாரைக் கேளுங்கள் புத்தகங்களைத் தொகுத்து வெளியிட்டவர்.

“பெரியாரை அணுக்கமாகப் பார்த்ததை, நெருக்கமாகத் துய்த்து உணர்ந்ததையெல்லாம் எழுத்து வடிவில் எழுதி வரும் தலைமுறைக்குக் கொடுத்து சென்றவர் புலவர் மா.நன்னன். தமிழ் குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் பல தலைப்புகளிலும் சிறியதும் பெரியதுமாகிய 124 நூல்களைப் படைத்தவர் – பகுத்தறிவு எழுத்துகளாகத் தன் எழுத்துகளை அமைத்துக் கொண்டவர் – பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் பொறுப்பை ஏற்று, பல ஊர்களுக்கும் சென்று தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியவர் மா.நன்னன் ஆவார்” என்று தமிழர் தலைவர் ஆசிரியரால் பாராட்டப்பட்டவர். முத்தமிழறிஞர் கலைஞரிடத்திலும், தி.மு.கழகத்திலும் முக்கியமானவராக திகழ்ந்தவராவார்.

அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளையில் தந்தை பெரியார் ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, “பெரியார் பேருரையாளர்” என்னும் சிறப்புப் பெற்றவர்.

தன் வாழ்நாளின் இறுதிவரை பகுத்தறிவாளராகவே வாழ்ந்து, அதையும் பதிவு செய்தவர் நன்னன்.

 

பாவலர்மணி புலவர் ஆ. பழநி பிறந்தநாள் இன்று (07-11-1931)

இந்நாள் - அந்நாள்

காரைக்குடியில் 1931 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் ஆண்டியப்பன் – உமையாள் இணையருக்கு ஒன்பதாவது மகனாகப் பிறந்தவர் புலவர் ஆ. பழநி. எட்டு உடன்பிறப்புகளுடன் விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த இவர், அய்ந்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், கற்றலிலும் சிந்திப்பதிலும் கொண்ட ஆர்வத்தை ஒருபோதும் கைவிடவில்லை.

1950களில் தமிழர் உள்ளங்களில் வேரூன்றிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ‘திராவிடநாடு’, ‘போர்வாள்’, ‘திராவிடன்’ ஆகிய இதழ்கள் இவரது சிந்தனையைச் செழுமைப்படுத்தின. இதன் விளைவாகத் தமிழ்மொழி, தமிழினம், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த பற்று உருவானது. தமிழ் இலக்கியங்களை ஆழமாகக் கற்கும் ஆர்வத்துடன் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தார்.

1974 ஆம் ஆண்டு நெல்லை தனித் தமிழ் இலக்கியக் கழகம் ‘அனிச்ச அடி’ நாடகத்திற்கு திறனாய்வு அரங்கம் நடத்தி இவருக்கு ‘பாவலர் மணி’ என்னும் பட்டம் வழங்கியது. 1980 ஆம் ஆண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்கு ‘கவிஞர்கோ’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

2016 ஆம் ஆண்டு தனது சேமிப்பிலிருந்து ரூ.7 லட்சத்தை முதலீடாகக் கொண்டு ‘அனிச்சம் அறக் கட்டளை’யை நிறுவினார். தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி முதியோர் இல்லங்களுக்கு சமூகநலப் பணியை இவ்வறக் கட்டளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அவர் தொடங்கிய இந்த அறப்பணி பத்தாண்டுகளைக் கடந்தும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

‘கம்பரின் மறுபக்கம்’ என்ற நூலைப் படைத்து கம்பராமாயண இலக்கிய ஆய்வில் புதிய பார்வையை முன்வைத்தார். 2018 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்நூலைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

கவிஞர், நாடக ஆசிரியர், காப்பியப் படைப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர், ஆய்வாளர் எனப் பன்முகப் பரி மாணங்களுடன் விளங்கிய புலவர் ஆ. பழநி, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் காரைக்குடியில் மறைவுற்றார்.

தகவல் : கானாடுகாத்தான் சுப.அழகுபாண்டியன்

 

அறிவியலாளர் மேரி கியூரி
பிறந்தநாள் இன்று (07-11-1867)

இந்நாள் - அந்நாள்

புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் ஆய்வு அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் நவம்பர் 7, 1867 இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903,  1911ஆம் ஆண்டுகளில் பெற்றார். இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபரும் இவரே ஆவார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவரும் இவரேயாவார். இவர் 1934 ஆம் ஆண்டு ஜூலை
4ஆம் நாளில் தமது 67 ஆவது வயதில் மறைவுற்றார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *