ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல்களை நம்ப முடியாது அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

- Advertisement -

கொச்சி, நவ.8 நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை உறுதி செய்யப்படும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அவர், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கொச்சி பன்னாட்டு விமான நிலை யத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அபிஜித் தீப்கே, தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையின் கீழ் நடைபெறும் தேர்தல்களை ஒருபோதும் நம்ப முடியாது என்று குற்றம்சாட்டினார். ஒற்றைக் கட்சிக்கு சாதகமான முறையில் தேர்தல்கள் கையாளப்படுவதாகவும், இதற்கான பல சான்றுகள் நம் கண் முன்னே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் சுதந்திரமான மற்றும் நடுநிலையான தேர்தல் அமைப்பு முறை மீட்கப்படும் வரை தங்களது சட்டப்பூர்வமான போராட்டம் ஓயாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

கொச்சியில் நடைபெற்ற ‘ஜந்தர் மந்தர் பாணி’ ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக கேரளாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். சி.ஜே.பி. கட்சியின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தின்படி, நாடு முழுவதிலும் உள்ள பதிக்கப்பட்ட உறுப்பினர்களில் அதிகமானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அபிஜித் தீப்கே, மாநிலத்தின் இளைஞர்கள் ஜனநாயகத்தைக் காக்க வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மரைன் டிரைவ் பேரணி

கேரளாவின் கொச்சி நகரில் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் சி.ஜே.பி. சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் சுமார் அய்நூறுக்கும் மேற்பட்ட செயற் பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக் கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவியிலிருந்து விலக செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாணவரணித் தலைவர்கள் இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கி ஆதரவு தெரிவித்தனர். தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *