இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்கக் கோரிய வழக்கு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தாக்கீது

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 27- தமிழ் நாட்டில் செயற்கையாக இடைத் தேர்தல் நடைபெற வழிவகுத்ததாகக் கூறப்படும் தொகுதிகளில், தேர்தல் நடத்துவதற்கான செலவினங்களை சம்பந்தப் பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அறிவிக்கை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக கே.சுதன் என்பவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், அரசியல் சுயலாபத்துக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் தானாக பதவி விலகும்போது, அங்கு செயற்கையான இடைத் தேர்தல்கள் திணிக்கப்படுகின்றன.

இவ்வாறான இடைத் தேர்தல் களால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணாகிறது. எனவே, இதுபோன்ற தேவையற்ற இடைத்தேர்தல் செலவினங்களை அரசு ஏற்காமல், பதவிவிலகிய முன் னாள் சட்டமன்ற உறுப்பினர்களிட மிருந்தே முழுமையாக வசூலிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங் கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைத்தேர்தல் செலவினங்கள் தொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், வழக்கை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. குறிப்பாக, இடைத் தேர்தல் செல வினங்களையும் மனுவில் சேர்க்க இருப்பதாகத் தெரி விக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் ஒன்றிய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று பின்னர் பதவியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சத்தியபாமா, மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜய பாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு அறிவிக்கை பிறப்பித்து, வழக்கை நவ.
11-க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *