போரின் தாக்கத்திலிருந்து மீள ஈரானுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகும் இடைத்தேர்தல் முடிவுக்கு பின் டிரம்ப் பேச்சு

- Advertisement -

வாசிங்டன், நவ. 8- ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ஏற் கனவே பெருமளவில் அழிக்கப் பட்டு விட்டதாகவும், அந்நாடு மீண்டும் பழைய நிலைக்கு மீண்டு வர 20 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் தெரி வித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் களுடனான சந்திப்பிற்குப் பிறகு வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், முடிந்தவரை ஈரான் நாட்டின் மீதமுள்ள பகுதிகளை அழிக்காமல் இருக்கவே தாம் விரும்புவ தாகவும், ஆனால் சூழ லுக்கு ஏற்ப ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அண்மையில் நடை பெற்ற அமெரிக்க இடைத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியிருந்தன. இடைத் தேர்தலுக்கு முன் இது குறித்துத் தெளிவான பதிலை அளிக்காத டிரம்ப், தற்போது ஈரானை கையாள அமெரிக்கப் படைகள் எப்போதும் முழுத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானுடனான போர் காரணமாக எரி பொருள் விலை உயர்ந்து, இடைத்தேர்தலில் குடி யரசுக் கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்ட டிரம்ப், இருப்பினும் அணுஆயுதங்களை ஈரான் தயாரிப்பதைத் தடுப்பதற்கு இந்த போர் நடவடிக்கை மிகவும் அவசியமானது என்றும் கூறியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக் செத்தை பதவியிலிருந்து நீக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், அவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெறக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *