பிரேசிவில்லி, ஜூன் 13- கிழக்கு காங்கோவில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாமில் எபோலா தொற்றுப் பாதிப்பால் 2 போ் உயிரிழந்ததாக அய்.நா. அகதிகள் முகமை தெரிவித் துள்ளது.
மக்கள் மிகவும் நெருக் கடியாக வசித்து வரும் இந்த முகாமில், நோய் அறிகுறிகள் உள்ளவா்களைத் தனிமைப்படுத்துவது சாத்திய மற்றது எனவும் தொற்றுப் பீதியில் மக்கள் தப்பினால் நிலைமை மேலும் விபரீதமாகும் எனவும் கவலை எழுந்துள்ளது.
காங்கோவில் இதுவரை 676 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 136 போ் உயிரிழந்துள்ளனா்.
அண்டை நாடான உகாண்டாவில் 19 பேருக்கு பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.
