அமெரிக்கா போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டத்தை வழங்கிவிட்டோம்: ஈரான் அறிவிப்பு

டெஹ்ரான், மே 4- போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

புதிய சமரசத் திட்டம்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடங் கிய போரில் தற்போது தற் காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதனிடையே நிரந்தரப் போர் நிறுத்தத்துக்கு ஈரான் புதிய சமரச திட்டத்தை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது.

ஆனால் இந்த சமரசத் திட்டத்தில் தனக்கு திருப்தி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனிடையே ஈரான் அளித்த சமரசத் திட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஈரான் 14 அம்சங்களை தெரிவித்து இருக்கிறது. லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் போரை முடி வுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஈரானைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ள கடற்படை முற்று கையை நீக்க வேண்டும். அமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும். ஹார்முஸ் நீரிணைக்கு ஒரு புதிய நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும். ஈரான் மீதான தடைகளை நீக்க வேண்டும். முடக்கப்பட்ட ஈரான் நாட்டு சொத்துகளை விடுவிக்க வேண்டும். ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்சங்கள் அதில் இடம் பெற்று உள்ளன.

மேலும் அனைத்துப் பிரச் சினைகளையும் தீர்க்க 30 நாள் காலக்கெடுவையும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. ஈரான் அளித்த சமரசத் திட்டத்தில் திருப்தி இல்லை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளார்.

ட்ரம்ப் பரிசீலனை

இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஈரான் தற்போது எங்களுக்கு அனுப்பியுள்ள சமரசத் திட்டத்தை நான் விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன். ஆனால், கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்துக்கும் உலகுக்கும் எதிராக அவர்கள் செய்த செயல்களுக்கு இன்னும் போதுமான அளவு பெரிய விலையை அவர்கள் செலுத்தாத நிலையில், அத்திட்டம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும் என்று என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இவ்வாறு ட்ரம்ப் கூறி உள்ளார்.

இதனிடையே நேற்று ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபடி கூறியதாவது: போரை நிறுத்துவது தொடர்பான 14 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்காவுக்கு வழங்கி விட்டோம். இப்போது முடிவு அமெரிக்காவின் கையில் உள்ளது. ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா அல்லது மோதல் போக்கை நீடிப்பதா என்பதை அமெரிக்காதான் முடிவு செய்யவேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *