சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்!

1 Min Read
- Advertisement -

விடுதலைநகர், நவ. 8- சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத்தின் நவம்பர் மாதக் கலந்துரையாடல் கூட்டம் 01.11.2026 அன்று சென்னை, கோவிலம்பாக்கம், விடுதலை நகரில் உள்ள பெரியார் நூலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், புலவர் சங்கரலிங்கம், பாவலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் கலைச்செல்வன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வி. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் வே. பாண்டு நோக்கவுரையாற்றினார்.

கூட்டத்தில் தோழர்கள் திவாகரன், நித்தியானந்தம், மணிகண்டன், விஜயலட்சுமி தமிழினியன், ராதா பாண்டு, வே.பா. அறிவன், சுமதி மணிகண்டன் மற்றும் தாம்பரம் மாவட்டச் செயலாளர் தோழர் நாத்திகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாள் மலருக்கு விளம்பரங்கள் வழங்குவது, மாவட்டக் கழகத்தின் சார்பில் குழு ஒளிப்படத்துடன் ஒரு பக்க விளம்பரம் அளிப்பது, ஒவ்வொரு தோழரும் விடுதலை நாளேட்டிற்கு இரண்டு சந்தாக்கள் சேர்ப்பது, 14.11.2026 அன்று பாலவாக்கத்தில் நடைபெறவுள்ள வழக்குரைஞர் தோழர் சே.மெ. மதிவதனி பங்கேற்கும் கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலாளர் தமிழினியன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *