பாட்னா, நவ. 6- இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி பேரணிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த அணிவகுப்பு களில் கலந்துகொள்ப வர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விவரங்கள் மிகவும் கமுக்கமாக பராமரிக் கப்பட்டு வரும் சூழலில், அதற்குப் பின்னணியில் உள்ள காரணத்தை விளக் குவது போல் பீகாரில் நடந்த பேரணி அமைந் திருப்பதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
பிகாரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி ஊர்வலத்தில் சந்தன் திவாரி, அபிஷேக் திவாரி, லாட்டு குமார் மற்றும் சரஸ் குமார் ஆகிய நபர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
யார் இவர்கள்?
அண்மையில் பிகாரில் 44,000 துப்பாக்கித் தோட்டாக்கள் பறி முதல் செய்யப்பட்ட சட்டவிரோத ஆயுதக் கடத்தல் வழக்கில் தொடர்புடைவர்கள் இவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தல் வலையமைப்பில் இவர்கள் முக்கியப் புள்ளிகளாகச் செயல்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இதுபோன்ற பகிரங்கப் பேரணிகளில் பங்கேற்றி ருப்பது பெரும் அதிர்ச்சி யையும், அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த கேள்வி களையும் எழுப்பியுள்ளது.
