அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டிரம்ப் கட்சி படுதோல்வி

- Advertisement -

வாசிங்டன், நவ. 5- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க செனட் சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதி நிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

435 பிரதிநிதிகள் சபை இடங் களுக்கும், 35 செனட் சபை இடங் களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, 3.11.2026 அன்று மாலை நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

பிரதிநிதிகள் சபையில் பெரும் பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 218 இடங்களிலும், குடியரசுக் கட்சி 113 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.

செனட் சபையில் பெரும் பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 52 இடங்களையும் குடியரசுக் கட்சி 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இன்னும் 10 இடங்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி ஏற்கனெவே பெரும்பான்மையை பெற்றுவிட்டது.

செனட் சபைக்கான 35 இடங் களில் 18 இடங்களில் ஜனநாயகக் கட்சியும் 9 இடங்கள் குடியரசுக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 8 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆளும் குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட கான்சஸ், டெக்சாஸ் மற்றும் தென் கரோலினா ஆகிய மாகாணங்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

கான்சஸில் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து, பாஸ்டர் ஆடம் ஹாமில்டன் ஜனநாயகக் கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திடாத வெற் றியைப் பெற்றுத் தந்தார். இது 94 ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *