திராவிடர் கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கும்படி நடைபெற்ற இருபெரும் விழாக்கள்!

- Advertisement -

கோவையில்… தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாள் விழா!
‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா!

கோவை.நவ.5- தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழாவும், ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாகவும், எழுச்சிகரமாகவும், கொள்கை உணர்ச்சியைத் தூண்டும் விதமாகவும், திராவிடர் கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கும் வண்ணமும் நடைபெற்றன. இந்நிகழ்வில் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவராம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராம் திராவிட நாயகரும் கலந்துகொண்டு கொள்கை முழக்கமிட்டனர். அரங்கு நிறைந்து திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்கள் உரைகளைக் கேட்டு ஆர்ப்பரித்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் 148 ஆம் பிறந்தநாள் விழா, ‘பெரியார் அறிவுலகம்’  கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டும் விழா ஆகிய இருபெரும் விழாக்களும், 4.11.2026, புதன்கிழமை மாலை 4:30 மணிக்கு, கோயமுத்தூர் வ.உ.சி.திடலில் மிகச்சிறப்பாக நடைபெற்றன. இதற்காக அவினாசி சாலை, மரக்கடை சாலை, கோவை சிறைச் சாலை, பீளமேடு விமான நிலைய சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட, இரு கழகக் கொடிகள் கட்டப்பட்டு, மாநாட்டுக்கு வருகை தந்தவர்களை “வாருங்கள்! வாருங்கள்!” என்று அழைப்பதைப் போன்று பட்டொளி வீசி பறந்துகொண்டிருந்தன. மாநாட்டுப் பந்தலின் முகப்பு, ’பெரியார் அறிவுலகம்’ கட்டடத்தை நினைவூட்டும் வண்ணம் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில் வலமும், இடமுமாக ’பெரியார் அறிவுலகம்’ ஒளிப்படங்களாக அலங்கரித்துக்கொண்டிருந்தன. மாநாட்டுப் பந்தலின் இருபக்கங்களிலும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் பதாகைகளாகக் காட்டப்பட்டிருந்தன. நிகழ்வின் தொடக்கத்தில் திருத்தணி பன்னீர்செல்வம், உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினர் திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளையும், அதன் தலைவர்கள் மற்றும் ‘பெரியார் அறிவுலக’த்தின் சிறப்புகளையும் உணர்த்தும் வகையிலான பாடல்களை இன்னிசையுடன் வழங்கினர். அதைத் தொடர்ந்து மாலை 6:10 மணிக்கு, திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான  திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் கைகளைக் கோர்த்தபடி மேடையேறினர். கருஞ்சட்டைப் படையினரும், பொதுமக்களும் அவ்வரிய காட்சியைக் கண்டு எழுந்து நின்று அலைகடலென ஆர்ப்பரித்து, கொள்கை முழக்கங்களை மயிர்க்கூச்செரியும் வண்ணம் முழங்கினர்.

தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் நிகழ்வைத் தொடங்கி வைத்தும், அனைவரையும் வரவேற்றும் சிறப்பாக உரையாற்றினார். கோவை மண்டல திமுக பொறுப்பாளரும், மேனாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தமிழர் தலைவர் ஆசிரியருக்கும், திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தந்தை பெரியார் சிலைகளை நினைவுப் பரிசாக அளித்தார். அடுத்து, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்ச்சியின் சிறப்பைச் சுட்டிக்காட்டும் வண்ணம் சிறப்புரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்குச் சால்வை அணிவித்து,  “திராவிட மாடல் அரசின் சரித்திரச் சாதனை” என்று பொறிக்கப்பட்டு, புத்துலகத்தைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்துவது போன்ற சிற்பத்தைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.

 

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், மாநில தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர் வீ.மோகன், மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் வி.சி.வில்வம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநில இளைஞரணிச் இணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா.வெற்றி குமார், தம்பி.பிரபாகரன், ப.வெற்றிவேல், மு.வீரமணி, திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்கள் தே.நர்மதா, செ.பெ.தொண்டறம், த.சிவபாரதி, மு.ராகுலன், மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் கா.க.ரங்கசாமி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் பெ.செல்வராஜ், பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், தாராபுரம் மாவட்டச் செயலாளர் ஜெ. தம்பி பிரபாகரன், நீலமலை மாவட்டச் செயலாளர் ச. ஜீவா, கோபி மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், ஈரோடு மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், பகுத்தறிவாளக் கழக மாநிலச் செயலாளர் தரும.வீரமணி, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் ப.திலகவதி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி, வழக்குரைஞர் அணி மாநிலத் துணைத் தலைவர் ஆ.பாண்டியன், கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி.

மாநில திராவிடர் கழக மகளிரசி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மகளிரணி மாநில துணைச் செயலாளர் இறைவி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், ஒசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் திராவிடமணி, வடசென்னை மாவட்டச் செயலாளர் அன்புச் செல்வன், ஆவடி மாவட்டச் செயலாளர் இளவரசன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன்

பொதுக்குழு உறுப்பினர்கள் இல.கிருஷ்ணமூர்த்தி, முத்து.மாலையப்பன், மாவட்டத் துணைத் தலைவர் பழ.அன்பரசு, மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் இரா.வெங்கடாசலம், குறிச்சி ஒன்றியச் செயலாளர் சா.சிவக்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு இராமலிங்கம், பீளமேடு பகுதிச் செயலாளர் ம.ரமேஷ், குனியமுத்தூர் பகுதிச் செயலாளர் க.தமிழ்முரசு, திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் த.க.கவுதமன், கோபி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மா.சூர்யா, அ.மு.ராஜா, சுந்தராபுரம் ர.வெற்றிச்செல்வம், மு.செல்வி, ஒசூர் செல்வம், இரா.முத்துகணேசன், அருண் உள்ளிட்ட ஏராளமான கருஞ்சட்டைத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பின்னர், திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று எழுச்சிகரமாக உரையாற்றி, கலந்து கொண்டவர்களுக்கு கொள்கை உரமேற்றினார். நிறைவாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சமூகநீதிக்கான சரித்திர நாயகருமான மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், எழுச்சிகரமாக தனது ஏற்புரையை நிகழ்த்தினார். திராவிட நாயகரின் உரைக்கு முன்னதாக, திராவிடர் கழக கோவை மாவட்டத் தலைவர் மானமிகு ம.சந்திரசேகர் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

நிகழ்வில், தி.மு.க. மண்டலப் பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேனாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தி.மு.க. கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்  தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவரும், மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளருமான வழக்குரைஞர் மு.சென்னியப்பன், திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு த.சண்முகம், மேட்டுப்பாளையத் தலைவர் மானமிகு சு.வேலுச்சாமி, நீலமலை மாவட்டத் தலைவர் மானமிகு மு.நாகேந்திரன், தாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், கோவை மாநகரத் தலைவர் தி.க.செந்தில்நாதன், கோவை மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், பெரியார் மருத்துவக் குழுமத்தின் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, கோவை மாநகரச் செயலாளர் க.வீரமணி மற்றும் மேனாள் தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

திராவிட நாயகர் உரை நிறைவு பெற்றதும், அவரைக் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து மண்டல வாரியாகக் கருஞ்சட்டைப் படையினர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் மேடையில் குழு ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டனர். கோவை. பொள்ளாச்சி, நீலகிரி, குன்னூர், மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பழனி, கோபி உள்ளிட்ட அருகிலிருந்த மாவட்டங்களிலிருந்தும், மாநில முழுவதிலிருந்தும் கழகத் தோழர்களும், தி.மு.க.வினரும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்களுக்கு எட்டிய தொலைவு வரையிலும் மனித்தலைகளே தெரியும் வண்ணம் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வரலாற்றில் தடம் பதித்த ஒன்றாக மாற்றிக்காட்டினர். தலைவர்களும், பொறுப்பாளர்களும், தொண்டர்களும் நிகழ்ச்சிக்கு வரும் போது இருந்த உற்சாகத்தைக் காட்டிலும், திரும்பும் போது அதனினும் அதிக உற்சாகத்துடனும், கொள்கைத் தெம்புடனும் திரும்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *