குழந்தைகள்மீதான பாலியல் குற்றங்கள் குறித்த பதிவுகள் இந்தியாவில் நேரடியாகத் தெரிவிக்க மெட்டா ஒப்புதல்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப் 16 இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளப் பக்கங் களில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தொடர்பான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் பரப்பப் படுவதாக ஒன்றிய அரசு, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு அண்மையில்  அறிவிக்கை அனுப்பியிருந்தது.

அரசு அனுப்பிய இந்த அறிவிக் கையை தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது புகாரளிக்கும் நடைமுறையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவர முன்வந்துள்ளது. அதன்படி, இனி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களை ‘இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மய்யத்தின்’ (I4C) இணையதளத்தில் நேரடியாகப் புகாரளிக்க மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு முன்பாக, தனது தளங்களில் பதிவேற்றப்படும் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை அமெரிக்காவில் செயல்படும் ‘காணாமல் போன மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளுக்கான தேசிய மய்யத்திற்கு’ (NCMEC) மட்டுமே மெட்டா நிறுவனம் புகாரளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் மெட்டா நிறுவனத்தின் இந்த ஒப்புதல் மூலம், இந்தியாவில் குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மீது இனி மிக விரைவாகவும் கடுமையான முறையிலும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *