வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கு புதிய மனுக்களைத் தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் உச்சநீதிமன்றம் உத்தரவு!

- Advertisement -

புதுடில்லி, நவ.4 முஸ்லிம்கள் ‘தான’மாகவும் நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை நிர்வகிக்கும் வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட ‘வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’-க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித் ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இச்சட்டம் அமலுக்கு வந்தது.

இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 5 முதன்மை மனுக்களை மட்டும் விசாரணைக்குத் தேர்வு செய்த உச்சநீதிமன்றம், ‘மறு ஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்ற பெயரில் விசாரித்து வந்தது.

முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில்  கூறப் பட்டதாவது: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்தான் சொத்து களை வக்ஃப் வாரியத்திற்கு தானமாக வழங்க முடியும் என்ற பிரிவு,

வக்ப் சொத்து அரசு நிலமா என்பதைத் தீர்மானிக்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரம், ஆகிய முக்கிய நடைமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும், மத்திய வக்ப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை 4-க்கு மிகாமலும், மாநில வக்ஃப் வாரியங்களில் 3-க்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

நேற்று (3.11.2026) நடந்த விசாரணை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான ஒருங் கிணைப்பு வழக்குரைஞர், “முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 5 முதன்மை மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு, மற்ற 135 மனுக்களும் இடைக்கால மனுக்களாக மாற்றப்பட்டன. இந்த இடைக்கால மனுதாரர்கள் புதிய எழுத்துப்பூர்வ மனுக் களைத் தாக்கல் செய்தால், அவை அனைத்தும் ஒருங்கிணைக் கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: இடைக்கால மனு தாரர்கள் அனைவரும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தங்களின் புதிய எழுத்துப்பூர்வ மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன் நகலை ஒருங்கிணைப்பு வழக்குரைஞரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு அரசுத் தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுக்கள் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும்.

ஒன்றிய அரசின் எதிர்ப்பு:

முன்னதாக, புதிய இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்பதை ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்த்து வாதிட்டார். மனுக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதைத் தவிர்க்கவே 5 முதன்மை மனுக்கள் மட்டும் விசாரிக்கப்படும் என கடந்த ஆண்டு ஏப்ரல் 17-இல் உத்தரவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், உச்ச நீதிமன்றம் அந்த நிலைப் பாட்டிலிருந்து மாறக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், மனுக்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசா ரணையை 2027-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *