சென்னை, நவ. 3- சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் தலைமைப் பதவிகள் காலியாக இருப்பதால், புதிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் முக்கிய நிர்வாக முடிவுகளை எடுப்பதி லும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் 15,000-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் வரும் இம்மாபெரும் மருத்துவமனையின் முதல்வராக இருந்த மருத்துவர் சாந்தாராமன் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். தற்போது பொறுப்பு முதல்வர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை, கண் மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் ஆகியவை இதன் கட்டுப்பாட்டிலேயே வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முதல்வராக இருந்த மருத்துவர் அரவிந்த், மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்பதவி காலியாக உள்ளது. கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை: தமிழ்நாட்டின் முன்மாதிரி மருத்துவ மையமான கிண்டி மருத்துவமனையிலும் இயக்குநர் பணியிடம் பல மாதங்களாக காலியாகவே நீடிக்கிறது. முழு அதிகார மிக்க நிரந்தர முதல்வர்கள் இல்லாததால் மருத்துவமனைகளின் புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளதாக ‘ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்’ கவலை தெரிவித்துள்ளது.
காலதாமதமின்றி தகுதியானவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் விரைவில் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் எனத் தெரிவித்தனர்.
